அன்னசேவை – பொதிகை
+919976489898
தர்மத்தின் வழி செல்ல செல்ல கர்மத்தின் வலி குறையுமப்பா !

அன்னசேவை

10612695_954334394632313_9165456770148413602_n

ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின் !

தவத்தால் தன்பசியை பொறுத்து கொள்ளும் யோகி ஆற்றலை விட பிறர் பசியை தீர்த்து வைக்கும் ஈகையாளரின் ஆற்றல் உயர்ந்தது .
காக்கைக்கு உணவு கிடைக்கும் நேரங்களில் அது கரைந்து தன் கூட்டத்தையும் அழைத்து வைத்துக்கொண்டு உணவு உண்ணும். நீங்களும் அதுபோல் அவர் இவர் என்று வேறுபாடு பார்க்காமல். எல்லோருக்கும் உணவு அளியுங்கள். உணவு நாளை வேண்டும் என்று எடுத்து வைக்காதீர்கள். வாழ்க்கையில் ஆசை உடைய நீங்கள் வேகமுடன உண்ணாதீர்கள், பொருமையுடன் உண்ண வேண்டும். எல்லோருக்கும் உணவளித்து தானும் உண்ண வேண்டும்

செல்வத்தோடு இருக்கும் காலங்களில் தருமம் செய்யாமல் இருக்கின்றீர்களே. இனி இருக்கின்ற காலத்திலும் என்ன செய்வீர்!. இந்த உடம்பு நெருப்பிலே அழியும்போது என்ன செய்வீர்! சேர்த்த செல்வங்கள் என்னவாகும் இப்பொழுதே சிந்திப்பீராக. தரும சிந்தனை இல்லாத ஏழை நெஞ்சம் உடையோரே!